حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 23
اللهُمَ إني أعُوذُ بِكَ أن أَضِلَّ أوْ أُضَلَّ أَوْ أزِلَّ، أو أُزَلَّ، أوْ أظلِم أوْ أُظْلَم، أوْ أَجْهَلَ أوْ يُجْهَلَ عَلَيَّ
أهل السنن وانظر صحيح الترمذي 3/ 152 وصحيح ابن ماجه 2/ 336
حدثنا مسلم بن إبراهيم حدثنا شعبة عن منصور عن الشعبي عن أم سلمة قالت ما خرج النبي صلى الله عليه وسلم من بيتي قط إلا رفع طرفه إلى السماء فقال اللهم أعوذ بك أن أضل أو أضل أو أزل أو أزل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي
《☆》 உம்மு ஸலமா (ரலி) – நபி (ஸல்) எனது வீட்டிலிருந்து எப்பொழுது வெளியேறினாலும் வானத்தை நோக்கி தனது பார்வையை உயர்த்தி
اللهُمَ إني أعُوذُ بِكَ أن أَضِلَّ أوْ أُضَلَّ أَوْ أزِلَّ، أو أُزَلَّ، أوْ أظلِم أوْ أُظْلَم، أوْ أَجْهَلَ أوْ يُجْهَلَ عَلَيَّ
(நான் வழி தவறிப்போவதை விட்டு வேறொருவரால் வழி தவறப்படுவதை விட்டும், தவறுவதை விட்டும் பிறர் என்னை தவற விடுவதை விட்டும், அநியாயம் செய்வதையும் செய்யப்படுவதை விட்டும், மடத்தனம் செய்வதையும் மடயனாவதை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ்) என்று கூறுவார்கள்.
《☆》 உம்மு ஸலமா (ரலி) விடமிருந்து இமாம் ஷஹபீ அவர்கள் கேட்டதாக வருகிறது. ஆனால் பொதுவாகவே உம்மு ஸலமா (ரலி) இடமிருந்து இமாம் ஷஹபீ எதையும் கேட்கும் வாய்ப்பு இருந்ததில்லை என்று இமாம் அலீ இப்னுல் மதீனி (இமாம் புகாரியின் ஆசிரியர்) கூறுகிறார்.
கருத்துரைகள் (Comments)