حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 46
85 – “اللهم عَالِمَ الغيب والشَّهادة، فاطر السموات والأرض، رب كل شيء ومليكه، أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه
وأن اقترف على نفسي سوءًا أو أجُره إلى مسلم“
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، مُرْنِي بِكَلِمَاتٍ أَقُولُهُنَّ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ . قَالَ : ” قُلِ : اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا أَنْتَ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي ، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشِرْكِهِ ” . قَالَ : ” قُلْهَا إِذَا أَصْبَحْتَ ، وَإِذَا أَمْسَيْتَ ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ ” .
அபூபக்கர் (ரலி) – யா ரசூலுல்லாஹ் நான் காலையை அடைந்தாலும் மாலையை அடைந்தாலும் சொல்லக்கூடிய ஒரு வார்த்தையை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள் “
⬇️↔ اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ
வானங்களையும் பூமியையும் படைத்தவனே
⬇️↔ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ
மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிந்தவனே
⬇️↔ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ
அனைத்திற்கும் ரப்பாகவும் சொந்தக்காரனாகவும் இருப்பவனே
⬇️↔ أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا أَنْتَ
உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
⬇️↔ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي
எனது ஆத்மாவால் ஏற்படும் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்
⬇️↔ وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ
விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும்
அவனை கூட்டு சேர்ப்பதை விட்டும் ↔ وَشِرْكِهِ
என்று நீங்கள் காலையை அடைந்தாலும் மாலையை அடைந்தாலும் தூங்கச்சென்றாலும் கூறுங்கள்.
《☆》 இந்த செய்தி அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகவும், அபூபக்கர் (ரலி) மூலமாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகவும் இடம்பெறுகிறது, அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிப்பதாகவும், அபூமாலிக் அல் அஷ்அரீ (ரலி) அறிவிப்பதாகவும் இடம்பெறுகிறது.
(அபூதாவூத் 5067 – ஸஹீஹ்)
《☆》 وأن اقترف على نفسي سوءًا أو أجُره إلى مسلم” எனக்கெதிராக நான் ஒரு பாவம் செய்வதை விட்டும் ஒரு முஸ்லிமுக்கு அதன் மூலம் அநியாயம் செய்வதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்ற இந்த வார்த்தை அபூபக்கர் (ரலி) வின் ஹதீஸில் இடம்பெறவில்லை. இந்த வார்த்தை ஒரு அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.
கருத்துரைகள் (Comments)