حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 5
நாம் ஏன் இந்த புத்தகத்தை கற்கப்போகிறோம்?
- நாம் ஒரு திக்ர் செய்கிறோம் அதன் இம்மை மறுமை பலன் என்ன என்று தெரியவேண்டுமென்றால் அதன் கருத்துக்கள் கட்டாயமாக நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
- அறிவிப்பாளர்கள் வரிசை பார்த்து ஸஹீஹ் ஆனதா ளயீஃப் ஆனதா என்று அதன் நம்பகத்தன்மையை ஆய்வோம்.
- ஒரு திக்ர் படிக்கும்போது அதன் சிறப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
لا يزال لسانك رطبا من ذكر الله
நபி (ஸல்) – உன்னுடைய நாவு அல்லாஹ்வுடைய திக்ரில் ஈரமாகவே இருக்கட்டும் என கூறியிருக்கிறார்கள்.
சூரா அர்ரஃது 13:28
ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன….
கருத்துரைகள் (Comments)