حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 52
93- ” لا إله إلا الله وحده لا شريك له ،له الملك وله الحمد وهو على كل شيء قدير“(مائة مرة إذا أصبح )
وحديث أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : “ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ
இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்கள் சுமை என்பவர் வழியாக அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) இடமிருந்து:-
யாரொருவர் இந்த துஆ வை 100 முறை சொல்லுகிறாரோ அவருக்கு 10 அடிமைகளை விடுதலை செய்த கூலி உண்டு அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும் அவரை விட்டும் 100 (சிறு) பாவங்கள் அழிக்கப்படும். அன்றைய தினம் மாலையை அடையும் வரை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்டவராக இருப்பார். அன்றைய தினத்தில் அமல்களால் சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் இவரை விட அதிகமாக ஓதியவரை தவிர.
(من قال سبحان الله وبحمده في يوم مائة مرة، حطت عنه خطاياه، ولو كانت مثل زبد البحر)
மேலும் யாரொருவர் سبحان الله وبحمده என்று ஒரு நாளில் 100 முறை சொல்கிறாரோ அவரது பாவங்களையெல்லாம் உதிர்க்கப்பட்டுவிடும்; கடல் நுரையளவுக்கு அது இருந்தாலும் சரியே.
ஸஹீஹ் முஸ்லீம் 7018
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ، عَنْ سُهَيْلٍ ، عَنْ سُمَيٍّ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ ”
சுமை அவர்கள் வழியாக சுஹைல் அறிவிக்கிறார்கள் அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக:-
யாரொருவர் காலையிலும் மாலையிலும் سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ என்று 100 முறை கூறுகிறாரே அவரை விட மறுமை நாளில் அதிகமாக கொண்டு வருபவர் இருக்க மாட்டார்கள். அவரைப்போன்றோ அல்லது அவரை விட அதிகமாக ஓதியவரையோ தவிர.
《☆》 ஸஹீஹ் முஸ்லீம் 7019(ஹஸன் )
இமாம் மாலிக் அவர்கள் வழியாக வந்த மேற்கூறப்பட்ட ஹதீஸில் காலை மாலை என்று இடம்பெறவில்லை மாறாக ஒரு நாளில் 100 முறை என்றே இடம்பெறுகிறது.ஆகவே சில அறிஞர்கள் இதை காலை மாலை துஆ வில் சேர்க்காமல் பொதுவாக ஒரு நாளில் 100 முறை என்று கூறியிருப்பினும், பொதுவாக ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை காலை மாலை துஆ வில் சேர்த்தே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
《☆》 இதே ஹதீஸ் இமாம் புஹாரி பதிவு செய்ததில் சுபஹானல்லாஹி வபிஹம்திஹி யின் செய்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வேளைகளில் இமாம் புஹாரி ஹதீஸுகளை தளைப்பிர்க்கேற்றவாறு சுறுக்குவதும் உண்டு. ஆகவே இந்த ஹதீஸ் சுறுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.
புஹாரி 3893
கருத்துரைகள் (Comments)