ஹிஸ்னுல் முஸ்லிம் 53

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 53

92- “لا إله إلا الله وحده لا شريك له ،له الملك وله الحمد وهو على كل شيء قدير”( عشر مرات)( أو مرة واحدة عند الكسل)

இந்த துஆவை 10 முறை கூறுதல் அல்லது சோம்பல் நேரத்தில் ஒரு முறை கூறுதல்.

《☆》 இமாம் கஹ்தானீ சோம்பல் நேரத்தில் 1 முறை ஓதுதல் என்று எங்கிருந்து எடுத்தார் என்று அறிந்துகொள்ள முடியவில்லை.

مَنْ قَالَ إِذَا أَصْبَحَ:” لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ” كَانَ لَهُ عِدْلَ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَعِيلَ عليه السّلام، وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ، وَكَانَ فِي حِرْزٍ مِنْ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ، وَإِنْ قَالَهَا إِذَا أَمْسَى كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ 

யாரொருவர் காலையை அடையும்போது இந்த துஆவை சொல்கிறாரோ அவருக்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் பரம்பரையில் ஒருவரை கிடைத்தது போல (விடுதலை செய்தது) போலவும், 10 நன்மைகளும் எழுதப்படும், 10 தீமைகள் அழிக்கப்படும், அவருக்கு 10 தராஜாக்கள் உயர்த்தப்படும், மேலும் அவர் மாலையை அடையும் வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக இருப்பார். இதை மாலையில் ஓதினால் காலை வரை இந்த கூலி அவருக்கு கிடைக்கும்.

 فَرَأَى رَجُلٌ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم فِيمَا يَرَى النَّائِمُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَبَا عَيَّاشٍ يُحَدِّثُ عَنْكَ بِكَذَا وَكَذَا ؟ قالَ: 

(( صَدَقَ أَبُو عَيَّاشٍ )).

இந்த செய்தியின் தொடர்ச்சியில் :- 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை கனவு கண்டார்கள் அப்போது அவர் யா ரசூலுல்லாஹ் அபூ அய்யாஷ் நீங்கள் இவ்வாறெல்லாம் கூறுவதாக கூறுகிறார் என்றேன். அப்போது அபூ அய்யாஷ் உண்மையை உரைத்தார் என நபி (ஸல்) பதிலளித்தார்கள். 

அபூதாவூத் 5027(ஹஸன்)

قال  صلى الله عليه وسلم  : ] من قال دبر صلاة الفجر وهو ثاني رجله قبل أن يتكلم : لا إله إلا الله ، وحده لا شريك له ، له الملك وله الحمد ، يحيي ويميت ، بيده الخير ، وهو على كل شيء قدير . عشر مرات كتب الله له بكل واحدة قالها منهن حسنة ، ومحي عنه سيئة ، ورفع بها درجة ، وكان له بكل واحدة قالها عتق رقبة ، وكان يومه ذلك في حرز من كل مكروه ، وحُرس من الشيطان ، ولم ينبغ لذنب أن يدركه في ذلك اليوم إلا الشرك بالله

யாரொருவர் பஜர் தொழுகைக்கு பின் இரு கால்களையும் மடித்துக்கொண்டு பேசுவதற்கு முன்னால் இந்த துஆ வை சொல்கிறாரோ அன்றைய தினம் ஷைத்தானால் எந்த பாவத்திலும் இவரை அகப்படுத்த முடியாது ஷிர்க்கை தவிர.

சுனனு திர்மிதி 3744(هذا حديث حسن صحيح غريب)

《☆》 இந்த அறிவிப்பாளர் வரிசை பிரச்னைக்குரியது. துஆ வை ஹஸன் ஆக்கி இந்த செய்தியை பலஹீனப்படுத்தி இருக்கலாம்.

ஷேக் அல்பானி இந்த அறிவிப்பாளர் தொடரில் ஷஹர் இப்னு ஹவ்ஷப் என்பவர் இடம்பெறுகிறார் ஆகவே இதை  லயீஃப் என்றார்கள். 

《☆》 ஆகவே காலையில் 10 முறை மாலையில் 10 ஓதுவது என்ற செய்தி பலஹீனமானது.

《☆》 திர்மிதி 3534 

(هذا حديث حسن غريب، لا نعرفه إلا من حديث ليث بن سعد، ولا نعرف لعمارة سماعاً عن النبي) 

உமாரா என்பவர் நபித்தோழர் என்பதே உறுதியல்ல. ஆகவே இதை இமாம் திர்மிதி غريب (லயீஃப்) என்கிறார்கள்.