حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 55
96 – “أستغفر الله وأتوب إليه ” (مائة مرة في اليوم )
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً
- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:-
‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)3
புஹாரி,
إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي ، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ
அகர் அல் முஸனி – நபி (ஸல்) – என்னுடைய உள்ளத்தில் கரை படிகிறது. நான் ஒரு நாளில் அல்லாஹ்விடத்தில் 100 முறை பாவமன்னிப்பு தேடுகிறேன்.
முஸ்லீம் 7033
《☆》 புஹாரியில் 70 என்றும் முஸ்லிமில் 100 என்றும் இடம்பெற்றிருக்கிறது.
《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ :- 7,70,700 என்பது அரபுகள் நிறைய என்று குறிப்பிட பயன்படுத்துவதாகும். ஆகவே புகாரியில் அறிவித்த அறிவிப்பாளர் கருத்தில் அறிவித்திருக்கலாம்(الروايا بالمعنى), முஸ்லிமில் வந்த ஹதீஸ் அப்படியே அறிவித்த அறிவிப்பாக இருக்கலாம்(الرواية باللفظ،)
கருத்துரைகள் (Comments)