حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 57
98- “اللهم صل وسلم على نبينا محمد “ (عشر مرات)
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ((مَنْ صَلَّى عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرًا، وَحِينَ يُمْسِي عَشْرًا، أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ
அபூதர்தா (ரலி) – நபி (ஸல்) – காலை நேரத்தில் யார் என் மீது 10 முறை ஸலவாத் சொல்கிறாரோ மேலும் மாலை நேரத்தில் 10 முறை சொல்கிறாரோ அவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைக்கும்.(பலஹீனமான செய்தி)
《☆》 நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லல்(அஸ்ஸலாத் அலன்னபீ) என்ற இப்னு அபீ ஆஸிம் அவர்களுடைய நூலிலும் இமாம் தபறானீ யின் முஹஜ்முல் சகீர் மற்றும் கபீரில் இடம்பெற்றிருக்கிறது.
《☆》 பகிய்யாத் இப்னுல் வலீத் என்பவர் அறிவிப்பாளர்களை மறைத்து அறிவிக்கக்கூடியவர்.
《☆》 ஹாலித் இப்னு மஹ்தான் இவர் அபூதர்தா (ரலி) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் கேட்டதில்லை.
《☆》 ஆகவே இது பலஹீனமான செய்தியாகும்.
கருத்துரைகள் (Comments)