🌹 முக்கிய அறிவித்தல் 🌹🌹
அதிகமான சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது குழுமத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்களின் விளக்கத்தை உங்களுக்கு நாம் வழங்குகிறோம்.
பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்கள்
1. ஸஹீஹானது. (Saheeh)
2. ஆதாரபூர்வமானது. (Authentic)
3. ஆதாரபூர்வமற்றது. (Non Authentic)
4. இட்டுக்கட்டப்பட்;டது. (Fabricated)
5. அடிப்படையற்றது. (There is no Hadhees like this)
6. கருத்து வேற்றுமையுள்ளது. (Has different opinions)
ஸஹீஹானது
ஸஹீஹ் என்பது ஆதாரத்தன்மையில் மிகவும் வலு கூடியதாகும்.
ஆதாரபூர்வமானது
ஆனால் பல ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானதாக இருந்தாலும் தரத்தில் ஸஹீஹ் என்ற தரத்தை அடையாமல் இருப்பதனால் ஆதாரபூர்வமானது என மாத்திரம் குறிப்பிடப்படும்.
ஆதாரபூர்வமற்றது
துணை ஆதாரமாகவேனும் பயன்படுத்தமுடியாத அளவு அறிவிப்பாளர் வரிசையில் கோளாறுள்ள ஹதீஸ்களுக்கு இவ்வாறு குறிப்பிடப்படும்.
இட்டுக்கட்டப்பட்டது
பொய்கூறும் அறிவிப்பாளர் மூலம் ஹதீஸ் அறிவிக்கப்பட்டால் அது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடப்படும்.
அடிப்படையற்றது (இவ்வாறு ஒரு ஹதீஸே இல்லை)
சில வேளை எந்த ஹதீஸ்கலை நூலிலும் குறிப்பிட்ட ஹதீஸ் இடம்பெறாத போது அது ஹதீஸே இல்லை என்பதாகக் குறிப்பிடப்படும்.
குறிப்பு:
புகாரி முஸ்லிமில் உள்ள அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹ் என்பதனால் அவற்றில் ஹதீஸ் இருப்பதை நீங்கள் உறுதி செய்தால் இங்கு கேட்கவேண்டிய அவசயமில்லை. ஆனால் சிலவேளை அவற்றில் இல்லாத ஹதீஸ்களும் தவறாக அவற்றில் உள்ளதாக செய்திகள் வருவதனால் ஒரு முறை மீளாய்வு செய்துகொள்வது சிறந்தது.
ஜஸாகல்லாஹூ ஹைறா. அல்லாஹ் மிக்க மேலானவன்
நிர்வாகம்
=======================================================================================
இது வரைக்கும் நமது குழுமத்தில் கேட்கப்பட்ட ஹதீஸ்களும் அவைகளுக்கான பதில்களும்.
கருத்துரைகள் (Comments)