அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 5

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 5

 லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா முழு இஸ்லாத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று குர் ஆன் ஹதீஸில் இல்லை இது இஸ்லாத்திற்குள் நுழையும் நிபந்தனையாக இருக்கிறது.

 ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபியை நபியாக ஏற்கவில்லையென்றால் அவர் முஸ்லிமாக்கமாட்டார்.

 லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் வை நபி (ஸல்) கற்றுத்தந்த முறையும் அவரது தோழர்கள் புரிந்து கொண்ட முறையிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

[highlight color=”gray”]தவ்ஹீது ரப்[/highlight] – படைத்தல் பரிபாலித்தல் போன்றவை ஒருவனுக்கே சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளுதல்.

[highlight color=”gray”]தவ்ஹீது உலூஹிய்யா[/highlight] – எவன் படைத்தானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பிற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு இது தான்.

[highlight color=”gray”]தவ்ஹீது அஸ்மா வஸ் சிபாத்[/highlight] – அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் இணைவைத்தல். இந்த பகுதியில் தான் இஸ்லாமிய சமூகம் வழிகெட்டது.