ஹிஸ்னுல் முஸ்லிம் 3

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 3

🔷சயீத் அல் கஹ்தான் என்ற இந்த நூலாசிரியர் எழுபதிற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்.

🎋وظلمات البدعة في ضوء الكتاب والسنة குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பித்அத்தின் இருள்கள்.

🎋نور التوحيد وظلمات الشرك في ضوء الكتاب والسنة தவ்ஹீதின் ஒளி குர் ஆன்  சுன்னத் அடிப்படையில்,

🎋குர் ஆன்  சுன்னத் ஒளியில் ஜகாத்,

🎋குர் ஆன் சுன்னத் அடிப்படையில் பிரயாணத்தொழுகை.

என நேர்த்தியான முறையில் அழகிய நடையில் தொகுத்திருக்கிறார் என்பதை காண முடிகிறது. தற்போது அவர் ரியாத்தில் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.

🔷ஹிஸ்னுல் முஸ்லிம் என்ற இந்த நூல் நாற்பத்து மூன்று  மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது.

🔷இந்த நூலுக்கு விரிவுரையும் வந்திருக்கிறது. அதை தன்னுடைய மேற்பார்வையில் வேறொரு விரிவுரையை மாற்றியமைத்தார். திக்ரின் சிறப்புக்களாக இமாம் இப்னுல் கைய்யிம்  அவர்களது தொகுப்பில் ஐம்பதிற்கும்  மேற்பட்ட பதிவுகளை அதில் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

நூலின் பிரதிகள் பற்றிய குறிப்பு:

இதில் பல பிரதிகள் இருக்கின்றன.  அதில் சில கருத்துக்களை அவர் பின்வாங்கியது தெரியாமல் பழைய பிரதிகளை அச்சடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.