حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 25
12- دعاء الذهاب إلى المسجد
பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ
اللهم اجعل في قلبي نوراً ، وفي لساني نوراً ، وفي سمعي نوراً ، وفي بصري نوراً ، ومن فوقي نوراً ، ومن تحتي نوراً ، وعن يميني نوراً ، وعن شمالي نوراً ، ومن أمامي نوراً ، ومن خلفي نوراً ، و اجعل في نفسي نوراً ، وأعظم لي نوراً ، وعظم لي نوراً ، واجعل لي نوراً ، واجعلني نوراً ، اللهم أعطني نوراً ، واجعل في عصبي نوراً ، وفي لحمي نوراً ، وفي دمي نوراً ، وفي شعري نوراً ، وفي بشري نوراً
குறிப்பு :-
எப்பொழுதும் நீளமான ஹதீஸுகளில் கிளை அம்சங்களில் சிறிய கருத்து முரண்பாடுகள் வரும்.
باب الدعاء إذا انتبه باللي
🌺 இமாம் புஹாரி இரவிலே விழித்தெழுந்தால் ஓதவேண்டிய துஆ என்ற தலைப்பில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.
🌺 இமாம் நஸயீ இந்த ஹதீஸை ஸுஜுதில் ஓத வேண்டிய துஆ என்று பதிவிட்டுள்ளார்கள்.
🌺 இமாம் இப்னு ஹுஸைமா தொழுகைக்கு செல்லும்போது ஓத வேண்டிய துஆ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
🌺 இமாம் பைஹகீ வீட்டிலிருந்து தொழுகைக்கு செல்லும்போது ஓத வேண்டிய துஆ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
🌺 இமாம் நவவீ பள்ளியை நோக்கி நடந்து சென்றால் ஓத வேண்டிய துஆ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
🌺 ஷேக் அல்பானி ஃபஜர் நேரத்தில் பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ என குறிப்பிடுகிறார்கள்.
《☆》 இந்த ஹதீஸ் ஸஹீஹ்.ஆனால் எங்கு ஓத வேண்டும் என்ற விஷயத்தில் சில முரண்பாடுகள் உள்ளன.
《☆》 இதன் அறிவிப்பாளர்களில் சுஃபியான் அவர்களது வழியாக வரக்கூடிய செய்திகளில் “இப்னு அப்பாஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் ஓதிய துஆ வில் உள்ளது தான் இந்த துஆ” என்று வருகிறது.
《☆》 இமாம் முஸ்லீம் ஷுஹ்பா அவர்கள் வழியாக அறிவிக்கக்கூடிய செய்தியில் “அவர்களது தொழுகையில் அல்லது ஸுஜூதில்” என்று இடம் பெறுகிறது.
《☆》 முஸ்லிமில் ஹபீப் இப்னு ஆபீசாபித் என்பவர் வழியாக வரும் செய்தியில் “இந்த துஆ வை சொல்லிக்கொண்டே பள்ளிக்கு சென்றார்கள்” என்றும். நஸயீயில் சயீத் இப்னு மஸ்ரூக் வழியாக “ஸுஜூதில் இதை சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்”என்றும் வந்துள்ளது.
《☆》 மேற்கூறப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் பலமானதே.
துஆவில் என்று கூறியது (இடத்தை சொல்லவில்லை), தொழுகையில் என்று கூறியது (ஸுஜூதிற்கு முரணில்லை), இம்மூன்று கருத்துகளையும் ஒரே இடத்திற்கு கொண்டு வரலாம். ஆகவே இது தொழுகையில் கூறியது என்று ஒரு கருத்திற்கு நம்மால் வர முடிகிறது.
《☆》 இதை முன்வைத்து சில அறிஞர்கள் – முஸ்லிமுடைய முன்னுரையில் கூறுகையில் நம்பகமான உறுதியானவர்களது அறிவிப்பை முதலாவதாக பதிவு செய்வேன். பிறகு அதை விட பலம் குறைந்ததை பதிவு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்கள்.
《☆》 இமாம் முஸ்லீம் முதலாவதாக கொண்டு வந்த செய்திகளெல்லாம் தொழுகையுடன் சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது இரண்டாவதாக கொண்டு வந்த செய்திகளில் ஹபீப் இப்னு அபீ ஸாபித் என்பவர் இடம்பெறுகிறார்.அதில் தான் பள்ளிக்கு செல்லும்போது என்று வருகிறது.
《☆》 ஹபீப் இப்னு அபீ ஸாபித் – பலகீனமானவரல்ல. ஆயினும் அந்த அளவுக்கு தரமானவரல்ல.
《☆》 இதை வைத்து அப்துல் அஸீஸ் அல் தரீபீ என்ற ஹதீஸ் கலை அறிஞர் கூறுகிறார் இது இரவில் தொழுகையில் ஓதும் துஆ என்ற கருத்தே சரியானதாகும்.
《☆》 பள்ளிக்கு செல்லும்போது ஓதும் துஆ என்று இதை கொண்டு வர முடியாது. இமாம் முஸ்லிமின் அணுகுமுறையும் அப்படித் தான் இருக்கிறது என்று கூறினார்கள்.
《☆》 மேலும் சில அறிஞர்கள் இதை மேற்கூறப்பட்ட மூன்று நேரங்களிலும் ஓதலாம் என்று கூறுகிறார்கள். அல்லாஹு அஃலம்.
கருத்துரைகள் (Comments)