தஃப்ஸீர் பாடம் 7
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)
இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்தி, அவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்; நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும், இறைவன் தான்
படைத்தான் என்பதில், எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு ஒரு காலமும் பெருமை வராது.
கருத்துரைகள் (Comments)