தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)

தஃப்ஸீர் பாடம் 11

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)

♥️ சூரா முஃமின்↔️40:16

அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது
அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகியஅடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.

♥️ சூரா ஃபஜ்ரி↔️89:22

இன்னும்வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

♥️ சூரா தாஹா↔️20:108

அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்அதில் எத்தகைய கோணலும் இருக்காதுஇன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லா சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.

ஆசிரியரின் கருத்து :

1. மறுமை நாளின் உண்மையான ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே
2. 
மறுமை என்பது நிச்சயமாக உள்ளது
3. 
இவ்வசனம் மனிதர்களை அமல் செய்யத்தூண்டுகிறது
♥️வசனம்-5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾

 

اِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِيْن
உன்னை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம் மேலும் உன்னிடம் மட்டுமே நாங்கள் உதவி தேடுகிறோம்

இதில் வணக்கம் உண்டு
1-
 نعبد – عبد – அடிபணிவது

🔹அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க பணிந்து அடிபணிய வேண்டும்
🔹அல்லாஹ் விரும்பி அங்கீகரிக்கின்ற வெளிப்படையான உள்ளார்ந்த அணைத்து செயல்களும் இபாதத் ஆகும்
🔹உதைமீன் (ரஹ்)- அல்லாஹ் ஏவிய அனைத்தையும் செய்வதையும் அவன் தடுத்த அனைத்தையும் விடுவதும் செய்வது தான்.