தஃப்ஸீர் பாடம் 14
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12c)
🔰 மனிதர்களின் சக்திக்கு உட்பட்டு உதவி கேட்கலாமா❔
- அவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி கேட்பது சிறந்தது.
- நீ உதவி கேட்பதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிந்தால் கேட்கலாம்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் 6
1) சலாமுக்கு பதில் சொல்வது.
2) ஒருவர் தும்மினால் الحمد لله. சொன்னால் நாம் பதிலுக்கு يرحمك الله சொல்ல வேண்டும்.
3) நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும்.
4) விருந்துக்கு அழைத்தால் பதில் கொடுக்க வேண்டும்.
5) ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லவேண்டும்.
6) உபதேசம் கேட்டால் உபதேசம் செய்ய வேண்டும்.
⭕ நபி (ஸல்) – ஒரு சகோதரரின் கஷ்டத்தை நீக்குபவரின் கஷ்டத்தை அல்லாஹ் நீக்குவான்.
⭕ ஹராமான விஷயங்களில் யாருக்கும் உதவி செய்யக்கூடாது.
கருத்துரைகள் (Comments)