தஃப்ஸீர் பாடம் 16
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b)
❤ வசனம் 6
الْمُسْتَقِيمَ | الصِّرَاطَ | اهْدِنَا |
நேரான | பாதை | எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக |
🔹 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
🔘ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன் கடைசி வரை இருக்கும்.
🔘மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் பாலம் என்று கூறும் கருத்து சரியானதல்ல.
🔘 நேரான வழி எது?
நபி (ஸல்) கொண்டு வந்த மார்க்கம்.
❤ சூரா அல் அன்ஆம் 6:153
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ⬇
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்6:153
சிராத் 2 வகைப்படும்
1) صراط المستقيم – நேரான வழி
2) صراط ملتوى مروج – கோணலான வழி
நபி (ஸல்) – நேரான கோடு வரைந்து இது தான் நேரான வழி இதில் செல்ல விடாமல் தடுக்க எல்லா பக்கமும் ஷைத்தான்கள் முயற்சிப்பார்கள். ஷைதான்களுக்கு நீங்கள் பதிலளித்தால் நரகத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள்.
கருத்துரைகள் (Comments)