தொழுகையின் நிபந்தனைகள் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

தொழுகையின் நிபந்தனைகள்

شروط الصلاة

தொழுகையின் நிபந்தனை – தொழுவதற்கு முன்னால் நம்மிடம் இருக்க வேண்டியவை.

(1) தொழுகையின் நேரத்தை அடைந்திருக்க வேண்டும்

(2) சிறு தொடக்கு(உளூவை முறிக்கும் காரியம்) மற்றும் பெருந்தொடக்கிலிருந்து(குளிப்பு கடமையானவர்) சுத்தமாயிருக்க வேண்டும்.

ஸூரத்துல் மாயிதா 5:6

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ

كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;

عن ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم يَقُولُ: “لاَ يَقْبَلُ الله صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ

غُلُولٍ” رواه مسلم

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – சுத்தமின்றி தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் (முஸ்லீம். இப்னு மாஜா, அபூ தாவூத்)