தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான்
பாகம் 1
ரஹ்மானுடைய அடியார்கள்
❤ வசனம் 63
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا
➥ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக அவன் அன்புள்ளவன், கருணையுள்ளவன்.
ரஹீம் – தன்னிடத்தில் உள்ள அன்பை அவன் பிறருக்கு கொடுக்கக்கூடியவன்.
❤ முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை அர் ரஹ்மான் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தான் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அவனுடைய அடியார்கள் எப்படி இருப்பார்களென்றால்:
1. அவர்கள் பூமியில் நடந்து சென்றால் பணிவுடன் நடப்பார்கள்.
இப்னு தய்மிய்யாஹ் (ரஹ்) – அகீதா வை பூரணப்படுத்தக்கூடியது எது என்று கேட்டபோது நல்ல பண்பு என்று கூறினார்கள்.
❁ [highlight color=”yellow”]சூரா அல்பகறா 2:85[/highlight]
اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍۚ
➥ வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா?
கருத்துரைகள் (Comments)