தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5
❤ வசனம் 65
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
➥ “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
❤ நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் பாதுகாவல் தேடுவீர்.
ان عذاب ربك لوا قع ماله من دافع
❤ உமர்(ரலி) – நிச்சயமாக உன்னுடைய ரப்பின் வேதனை வந்தே தீரும் அதை தடுக்க யாருமில்லை என்ற வசனத்தை திரும்ப திரும்ப ஓதியே நோய்வாய்ப்பட்டார்.
❤ நபி(ஸல்) – ஒரு முறை மிம்பரிலிருந்து أنذرتكم النار (உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன்) என்று சத்தத்தை உயர்த்தி கூறிக்கொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) வில் தோளிலிருந்து துண்டு கீழே விழுந்தது. ஸஹாபாக்கள் அனைவரும் கையால் முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுதார்கள்.
❤ நரக நெருப்பின் நிறம் கருப்பு. நரகத்தின் குறைந்த தண்டனை நெருப்பாலான செருப்பு அதை காலில் அணிந்தால் மூளை கொதிக்கும்.
❤ நரகத்தில் தரப்படும் சூடான நீர் முகத்தை பொசுக்கும். அதை குடித்தால் அவர்களுடைய குடல்கள் துண்டு துண்டாகிவிடும்.
❤ பசித்தால் அவனுக்கு சீழும் சலமும் தான் கொடுக்கப்படும். அதை விழுங்க முடியாமல் தடுமாறுவான். மரணம் எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் ஆனால் அவன் மரணிக்க மாட்டான். தோல் பொசுங்கி விட்டால் வேறு தோல்களை அல்லாஹ் மாற்றுவான்.
❤ ஜக்கூம் உலகில் ஒரு சொட்டு விழுந்தால் உலகமே விஷமாகிவிடும். ஆனால் நரகவாசிகள் உணவே அதுதான்.
கருத்துரைகள் (Comments)