அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1
❤ நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான்
❤ மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது.
✥ ஸூரத்துல் கமர் 54:1
اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
➥ (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
✥ ஸூரத்துல் அன்பியா 21:1
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَۚ
➥ மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
✥ ஸூரத்துந் நஹ்ல் 16:1
اَتٰۤى اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
➥ அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் – அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.
✥ ஸூரத்துந் நஹ்ல் 16:77
وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُؕ
➥ மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
✥ ஸூரத்துல் கமர் 54:46
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ
➥ அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
✥ ஸூரத்துந் நாஜிஆத் 79: 42, 43, 44, 46
(42) يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ
➥ (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி – அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
(43) فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ
➥ அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
(44) اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ
➥ அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
(46) كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا
➥ நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
கருத்துரைகள் (Comments)