ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 78

ஹதீஸ் பாகம்-78

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الأعمال بالخواتيم وما يخاف منها

செயல்களுடைய கூலிகளெல்லாம் இறுதி முடிவைப்பொறுத்து தான்(இறுதி முடிவை அஞ்ச வேண்டும்)

عن سهل بن سعد الساعدي قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل

المشركين وكان من أعظم المسلمين غناء عنهم فقال من أحب أن ينظر إلى رجل

من أهل النار فلينظر إلى هذا فتبعه رجل فلم يزل على ذلك حتى جرح فاستعجل

الموت فقال بذبابة سيفه فوضعه بين ثدييه فتحامل عليه حتى خرج من بين كتفيه

فقال النبي صلى الله عليه وسلم إن العبد ليعمل فيما يرى الناس عمل أهل الجنة

وإنه لمن أهل النار ويعمل فيما يرى الناس عمل أهل النار وهو من أهل الجنة

وإنما الأعمال بخواتيمها

சஹல் இப்னு சஹத் அஸ்ஸாஇதீ (ரலி) – யுத்தகளத்தில் முஷ்ரிக்குகளுடன் போராடும் ஒருவரை நபி (ஸல்) யுத்தகளத்தில் சந்தித்தார்கள். முஸ்லிம்களிலேயே மிகவும் அதிகம் போராடக்கூடிய போராளியாக அவர் இருந்தார். நரகவாதிகளில் ஒருவரைப்பார்க்க வேண்டுமென்றால் இவரைப்பார்த்துக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். ஒரு மனிதர் அவரை பின்தொடர்ந்தார் ஒரு கட்டத்தில் அந்த போராளிக்கு காயம் ஏற்பட்டது

மரணத்திற்காக அவசரப்பட்டு ஒரு வாளை நட்டுவைத்து தன்னை அதன் மீது குத்தவைத்து தற்கொலை செய்துக்கொண்டார் அப்போது நபி (ஸல்) கூறினார்கள் ஒரு மனிதன் அமல் செய்துக்கொண்டிருப்பான் மக்களுடைய பார்வையில் அது சொர்க்கவாசிகள் அமலைப்ப, போன்றிருக்கும் ஆனால் அவர் நரக வாதிகளில் ஒருவராக இருப்பார் சில மனிதர்களின் செயலைக்கண்டால் நரகவாதிகளின் செயல் போன்றிருக்கும் அவர் சுவர்க்க வாதிகளில் ஒருவராக இருப்பார் இறுதி முடிவை வைத்து தான் ஒருவருடைய அமல்  முடிவெடுக்கப்படும்.