ஹிஸ்னுல் முஸ்லிம் 40

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 40

துஆ 79:

“اللهم أنت ربي لا إله إلا أنت خَلَقتني وأنا عَبْدُك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء[9] لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت

《☆》 حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ

ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)-நபி (ஸல்) பாவமன்னிப்பு தேடுதலிலேயே பிரதானமானது

⬇↔ اللَّهُمَّ أَنْتَ رَبِّي

அல்லாஹுவே நீயே என் ரப்பு

⬇↔ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை

⬇↔ خَلَقْتَنِي

நீ தான் என்னைப்படைத்தாய்

⬇↔ وَأَنَا عَبْدُكَ

மேலும் நான் உன்னுடைய அடிமை

⬇↔ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

நான் உனக்கு அளித்த வாக்கிலும் உடன்படிக்கையிலும் என்னால் முடிந்த அளவு இருந்துகொண்டிருக்கிறேன்

⬇↔ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

நான் செய்த தீங்குகளிலிருந்து பாதுகாப்பாயாக

⬇↔ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ 

என் மீது நீ செய்த நிஹ்மத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்

⬇↔ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي

நான் செய்த பாவங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்

⬇↔ فَاغْفِرْ لِي

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக

⬇↔ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறில்லை

இந்த துஆவை மாலை நேரத்தில் ஓதி காலை வரும்முன்  மரணித்தால் அவர் சொர்க்கம் நுழைவார். காலையில் இதை ஓதி மாலைக்குள் மரணித்தால் சுவர்க்கம் நுழைவார்.(புஹாரி)