ஹிஸ்னுல் முஸ்லிம் 42

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 42

81- اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، فلك الحمد ولك الشكر

💕 ஸுனன் அபூதாவூத்- 5073

من قال حين يصبح اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، لك الحمد ولك الشكر فقد أدى شكر يومه ، ومن قال مثل ذلك حين يمسي ، فقد أدى شكر ليلته

அப்துல்லாஹ் இப்னு கன்னாம் அல் பயாலீ (நபித்தோழர் என கருதப்படக்கூடியவர்) – நபி (ஸல்) கூறினார்கள் யார் “காலையை அடைகின்ற போது

اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك ، لك الحمد ولك الشكر

(நான் இந்த நேரத்தை எந்த நிஃமத்துக்களோடு அடைந்தேனோ அது உன்னிடமிருந்து மட்டுமே கிடைத்தது, உனக்கு எந்த இணையுமில்லை உனக்கே நன்றிகளும் புகழனைத்தும் உனக்கே உரியது) என்று சொல்கிறாரோ அவர் அன்றைய தினத்தின் நன்றியை முழுமையாக அல்லாஹ்வுக்கு தெரிவித்துவிட்டார். மாலையில் யார் இதை சொல்கிறாரோ அவர் அந்த இரவின் முழு நன்றியையும் அல்லாஹ்வுக்கு தெரிவித்து விட்டார்.

விளக்கம்: 

💕 ஷேக் அல்பானி (ரஹ்) இதை பலஹீனமானது என்று குறிப்பிடுகிறார்கள். அவரது மிக முக்கியமான மாணவர்களில் ஒருவரான சலீம் அல் ஹிலாலி என்பவரும் இதை பலஹீனம் என்றே கூறுகிறார்.

💕 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் தஹ்ரீமு தஹ்தீல் என்ற நூலில் இந்த ஹதீஸை பற்றி இமாம் அபூ zசூர்ஆ அர் ராஸீ அவர்கள் لا اعرف الا فى حديث واحد (இதில் வரும் அப்துல்லாஹ் இப்னு அம்பஸ்ஸா(مجهول الحال) என்பவர் இந்த ஹதீஸை தவிர வேறு எந்த ஹதீஸிலும் இடம்பெறவில்லை)என்று கூறியுள்ளார்.

💕 இந்த ஹதீஸையும் இவர் ஒருவர் மட்டுமே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகுறிப்பு:

💕 அறியப்படாதவர்களை ஹதீஸ் கலையில் இரண்டாக பிரிக்கலாம்  

  • مجهول الحال – அவரது தரம் பற்றிய எந்த விவரமும் இல்லாமலிருத்தல்
  • ومجهول العين – ஒருவரைப்பற்றிய தகவலே இல்லாமலிருத்தல்.