சஜ்தா சஹ்வு பாகம் 08

ஃபிக்ஹ் 

சஜ்தா சஹ்வு

பாகம் – 8

إذا شك أحدكم في الثنتين والواحدة فليجعلها واحدة ، وإذا شك في الثنتين والثلاث فليجعلها

ثنتين وإذا شك في الثلاث والأربع فليجعلها ثلاثا ثم ليتم ما بقي من صلاته حتى تكون الوهم

في الزيادة ثم يسجد سجدتين وهو جالس قبل أن يسلم وأخرجه الحاكم في المستدرك ولفظه

فإن الزيادة خير من النقصان 

🌼 அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தன்னுடைய தொழுகையில் அவர் ஒன்று தொழுதாரா அல்லது இரண்டு தொழுதாரா என்று சந்தேகம் வந்தால் அதை அவர் ஒன்றாக ஆக்கிக்கொள்ளட்டும், இரண்டு தொழுதாரா அல்லது மூன்று தொழுதாரா என்று அறியவில்லையென்றால் அதை இரண்டாக ஆக்கிக்கொள்ளட்டும், மூன்றா அல்லது நான்கா என்று அறியவில்லையென்றால் மூன்றை ஆக்கிக்கொள்ளட்டும் பிறகு தொழுகையை முடித்துக்கொண்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்களை செய்து கொள்ளட்டும்(அஹ்மத், இப்னு மாஜா, திர்மிதி, 

🌼 அபூசயீத் அல் குத்ரி (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தன் தொழுகையில் தான் 3 தொழுதாரா அல்லது  4 தொழுதாரா என்று சந்தேகம் கொண்டால் தெளிவானதை எடுத்துக்கொள்ளட்டும் பிறகு ஸலாம் கொடுப்பதற்கு முன் சஜ்தா சஹ்வு செய்து கொள்ளட்டும். அவர் 5ஐ தொழுதால் ஸஜ்தாக்கள் மூலம் அதை இரட்டையாக்குகிறார் உண்மையில் 4 ஐ தொழுதிருந்தால் சஜ்தா சஹ்வு மூலம் ஷைத்தானுக்கு மூக்கு உடைக்கப்பட்டது 

 ஸஜ்தா சஹ்வு 

தொழுகையில் ரக்காத்துக்களை கூட்டினாலோ குறைத்தாலோ ஸலாம் கொடுத்ததற்கு பின்னால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும் 

🌼 அத்தஹிய்யாத்தை மறந்தாலோ சந்தேகம் கொண்டாலோ ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் சஜ்தா சஹ்வு செய்ய வேண்டும் 

🌼 மேற்கூறப்பட்டவையில்லாத ஒரு நிலை வந்தால் ஸலாமிற்கு முன்னாலும் சஜ்தா சஹ்வு செய்யலாம் அல்லது ஸலாமிற்கு பின்னாலும் சஜ்தா சஹ்வு செய்யலாம்.