ஃபிக்ஹ்
சஜ்தா திலாவத்
பாகம் – 4
🌹 ஸுஜூது திலாவதிற்கு உளூ செய்ய வேண்டுமா என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இருக்கிறது.
சில அறிஞர்கள் ஸுஜூது திலாவதிற்கு தொழுகைக்கு தேவையான அனைத்து காரியங்களும் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இமாம் ஷெளகானி (ரஹ்) – சஜ்தா திலாவதிற்கு உளூ அவசியம் என்று நாம் எந்த ஹதீஸிலும் காணவில்லை.ஏனெனில் நபி (ஸல்) உடைய சபையில் பலர் இருந்தார்கள் நபி (ஸல்) ஸுஜூது செய்தபோது அனைவரும் செய்தார்கள் அவர்கள் எவரையும் உளூ செய்து வருமாறு நபி (ஸல்) கட்டளையிடவில்லை.
🌹 இப்னு உமர் (ரலி) உளூ இல்லாமல் ஸஜ்தா செய்ததாக புகாரியில் செய்தி வருகிறது. மேலும் முஸன்னப் இப்னு அபீ ஷைபா விலும் இது போன்ற ஒரு செய்தி பதியப்பட்டிருக்கிறது.
கருத்துரைகள் (Comments)