ஜமாஅத் தொழுகை 04

ஜமாஅத் தொழுகை

பாகம்-4

பெண்கள் ஜமாத்துக்கு செல்லலாமா❔

  • பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று திரும்பும் சூழல் இருக்க வேண்டும்.
  • சரியான இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும்.
  • (அலங்கரித்து வாசனை திரவியம் பூசியவளாக இருக்க கூடாது)

عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال : 

{ إذا استأذنكم نساؤكم بالليل إلى المسجد فأذنوا لهن }

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் பெண்களை பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுக்க வேண்டாம் 

ஆனால் அவர்களுடைய வீடே அவர்களுக்கு சிறந்ததாகும்.(அஹ்மத், அபூ தாவூத்)

وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال : 

{ لا تمنعوا إماء الله مساجد الله ، وليخرجن تفلات}

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) –  அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை நீங்கள் பள்ளிகளுக்கு செல்வதிலிருந்து தடுக்காதீர்கள். அவர்கள் செல்லும்போது மணம் பூசாமல் செல்லட்டும் (அஹ்மத், அபூ தாவூத்)

குறிப்பாக இஷா தொழுகைக்கு பெண்கள் வருவதாயின் ஒரு வேலை மணம் பூசியிருந்தால் கடமையான குளிப்பு குளிப்பதை போல குளித்துவிட்டு வரட்டும் (அஹ்மத், அபூ தாவூத்)

فعَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-: 

(أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلاَ تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الآخِرَةَ).

அபூஹுரைரா (ரலி) – நறுமணம் பூசிய பெண்கள் இஷா தொழுகைக்கு ஜமாத்துக்கு வர வேண்டாம் (முஸ்லீம், அபூதாவூத், நஸயீ)

இதிலிருந்து பெண்களுக்கு பள்ளிக்கு செல்வதில் அனுமதி இருக்கிறது ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாகும்.

உம்மு ஹுமைத் அஸ் ஸாஹிதிய்யா (ரலி) – நபி (ஸல்) விடம் வந்து நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன் என்று கூறியபோது. நபி (ஸல்) உங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் தொழுவதை விட உங்கள் வீட்டில் நீங்கள் தொழுவதே சிறந்ததாகும். உங்கள் வீட்டின் உள் அறையில் தொழுவதே அதை விட சிறந்ததாகும்.