ஜமாஅத் தொழுகை 06

ஜமாஅத் தொழுகை

பாகம்-6

இமாமாக தொழும் வேளையில் 

அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) – உங்களிலொருவர் மக்களுக்கு தொழ வைக்க நேர்ந்தால் சுருக்கமாக தொழுது கொள்ளட்டும் உங்களுடன் தொழுபவர்களில் பலஹீனமானவர்கள் நோயாளிகள் முதியவர்கள் போன்றவர்கள் இருப்பார்கள். (புஹாரி, முஸ்லீம்)

முஆத் (ரலி) – நபி (ஸல்) உடன் தொழுதுவிட்டு தன்னுடைய ஊர் ஜமாஅத்தில் தொழ வைப்பார்கள். அப்போது நீளமாக தொழவைத்தபோது பின்னால் தொழுதவர் தனியாக தொழுது முடித்தார். அப்போது நபி (ஸல்) விடம் அழைத்து வரப்பட்டு காரணம் கேட்டபோது விவசாயம் செய்து களைப்பில் இருக்கும்போது இவர் நீளமாக தொழுது சிரமத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறியதும் நபி (ஸல்) முஆத் (ரலி) இடம் சுருக்கமாக தொழுமாறு உபதேசம் செய்தார்கள். 

عَنْ أَنَسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” إِنِّي لأَدْخُلُ فِي الصَّلاةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا ، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ

فَأَتَجَوَّزُ فِي صَلاتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ

அனஸ் (ரலி) – நான் தொழுகையை ஆரம்பிக்கிறேன் நீளமாக தொழ நினைக்கிறேன் குழந்தையுடைய அழுகை சத்தத்தை கேட்கிறேன் அந்த அழுகையின் மூலம் அதன் தாயின் மனம் வேதனைப்படும் என நினைத்து சுருக்கமாக தொழுகிறேன்