ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 4
பள்ளிக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதும் துஆக்கள்:
اللهم افتح لي أبواب رحمتك”
பள்ளிவாசலுக்கு செல்லும்போது கிடைக்கும் நன்மைகள்:
عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم -:((من غدا إلى المسجد أو راح،
أعدَّ الله له في الجنة نُزلاً كلما غدا أو راح))؛ متفق عليه.
🌰 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எவரேனும் பள்ளிவாசலுக்கு போகவோ வரவோ செய்யும்போது அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறான்(புஹாரி)
🌰 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் தன்னுடைய வீட்டிலிருந்து உளூ செய்து கொண்டு அல்லாஹ்வுடைய இல்லங்களில் ஒரு இல்லத்திற்கு; அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக சென்றால்; அவருடைய ஒரு எட்டு அவருடைய ஒரு பாவத்தை மன்னிக்கும் அடுத்த எட்டு அவருடைய அந்தஸ்தை உயர்த்தும்.(முஸ்லீம்)
🌰 அபூஸயீது அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு மனிதர் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை நீங்கள் பார்த்தால் அவர் ஈமான் உள்ளவர் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் பிறகு இந்த வசனத்தை ஓதினார்கள்
ஸூரத்துத் தவ்பா 9:18:
اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ.
(முஸ்னத் இமாம் அஹ்மத், திர்மிதி – ஹஸன்)
🌰 நபி (ஸல்) – உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு உங்களுடைய அந்தஸ்துகள் உயர்த்தப்படக்கூடிய ஒரு செய்தியை அறிவிக்கட்டுமா என்று கூறி விட்டு
💕 பள்ளிவாசலுக்கு செல்லும்போது அதிக எட்டுக்களை எடுத்து வைப்பது.
💕 வெறுப்புள்ள நேரத்திலும் முழுமையாக உளூ செய்வது
💕 அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதிற்கு சென்று அங்கு நிலைத்திருப்பது.
கருத்துரைகள் (Comments)