பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 09

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 9

💕 நபி (ஸல்) – உங்களிலொருவர் உமிழ்ந்தால் அதை இன்னொருவர் மீது படாத அளவிற்கு அதை மறைத்துக்கொள்ளட்டும்.(அஹ்மத்)

💕 நபி (ஸல்) – உங்களிலொருவர் தொழுகையிலிருந்தால் அவர்களுக்கு முன்னால் துப்ப வேண்டாம். ஏனெனில் அவர் அல்லாஹ்வுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.அவர் இடது பக்கம் துப்பட்டும் அல்லது அவரது காலுக்கு கீழே துப்பி மண்ணால் மறைத்து விடட்டும்.(புஹாரி)

💕 நபி (ஸல்) வின் பள்ளியில் ஒரு கிராம வாசி சிறுநீர் கழித்தபோது நபி (ஸல்) பள்ளிவாசல்கள் அசுத்தப்படுத்துவதற்கான இடமல்ல அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கான இடம் என்றார்கள்.