ஃபிக்ஹ்
தொழுகையின் ஃபர்ளுகள்
பாகம் – 9
🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது வயிறும் தொடைப்பகுதியும் இணையாமல் இடைவெளி விடுவார்கள்
🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது முழங்கையை நிலத்தில் படாமல் வைத்துக்கொள்வார்கள்.தனது இரண்டு விலாப்பகுதியிலுருந்து கைகளை தூரமாக்கி கொள்வார்கள். பின்பக்கத்திலிருந்து பார்ப்பர்வர்களுக்கு அவர்களது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்கு கைகளை தூரமாகி வைத்திருப்பார்கள்(புஹாரி, முஸ்லீம்)
🌼 ஒரு சிறிய ஆட்டுக்குட்டி செல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் கைகளை விரித்து வைத்திருப்பார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – நீங்கள் ஸுஜூது செய்தால் உங்களுடைய முட்டுக்கய்யய் உயர்த்தி வையுங்கள்(முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – நீங்கள் ஸுஜூது செய்யும்போது நடுநிலையுடன் செய்யுங்கள். உங்களிலொருவர் தங்களுடைய கையை நாய் வைத்திருப்பது போல வைக்க வேண்டாம்(புஹாரி, முஸ்லீம்)
🌼 நபி (ஸல்) – உங்களுடைய கைகளை சுஜூதில் மிருகங்கள் வைப்பது போல வைத்துக்கொள்ள வேண்டாம்.
கருத்துரைகள் (Comments)