أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 5
من مات وعليه دين فليس ثَمَّ دينار ولا درهم ولكنها الحسنات والسيئات
நபி (ஸல்) – யாரொறொருவர் கடனாளியாக மரணிக்கிறாரோ அவர் மறுமையில் தனது நன்மைகளை கடன் கொடுத்தவருக்கு கொடுக்கவேண்டி வரும் அல்லது கடன்கொடுத்தவரின் பாவங்களில் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.
(இப்னு மாஜா, முஸ்னத் அஹமத், ஹாகிம்)
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 2387)
ஜாபிர் (ரலி) – உஹதுடைய காலம் நெருங்கியபோது என்னுடைய தந்தை அந்த இரவு என்னை அழைத்து “நாளை நபித்தோழர்களில் முதலில் கொல்லப்படக்கூடியவர்களில் நானும் ஒருவன். எனக்குப்பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்ததாக உன்னை கண்ணியமானவனாக கருதுகிறேன். என்னுடைய கடன்களை நிறைவேற்றி விடு மகனே!, உங்களுடைய சகோதரிகள் விஷயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் ” என வஸிய்யத் செய்தார்கள். மறுநாள் காலையில் கொல்லப்பட்டவர்களில் முதல்வராக என்னுடைய தந்தை இருந்தார்.(புஹாரி)
வஸிய்யத்தை எழுதி வைக்க வேண்டும்
நபி (ஸல்) – ஒரு முஸ்லீம் தனது வஸிய்யத்துகளை தலையணைக்கு கீழே எழுதப்பட்டதாக வைக்காமல் 2 இரவுகளை கடத்த கூடாது.
இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த செய்தியை கேட்டதிலிருந்து என்னுடைய வஸிய்யத்தை எழுதாமல் ஒரு இரவை கூட கடந்ததில்லை.(புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)