حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 43
82- “اللهم عافني في بَدَني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت .اللهم إني أعوذ بك من الكفر، والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت” (ثلاث مرات)
《☆》 ஸுனன் அபூதாவூத் 5090
عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ، قَالَ : قُلْتُ لأَبِي : يَا أَبَهْ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو عِنْدَ كُلِّ غَدَاةٍ ” اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي ، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي ، لا إِلَهَ إِلا أَنْتَ ، تُعِيدُهَا ثَلاثًا حِينَ تُمْسِي ، وَثَلاثًا حِينَ تُصْبِحُ ، وَتَقُولُ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، لا إِلَهَ إِلا أَنْتَ ، تُعِيدُهَا ثَلاثَ مَرَّاتٍ حِينَ تُمْسِي ، وَثَلاثًا حِينَ تُصْبِحُ ، فَقَالَ : نَعَمْ يَا بُنَيَّ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ ، فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ
அபூ பக்ரா (ரலி) (தாயிஃப் ஐ சேர்ந்தவர்) அவர்கள் வழியாக தன் மகன் அறிவிக்கும் செய்தி – தந்தையே நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் இந்த துஆ வை சொல்வதை நான் பார்க்கிறேன்
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي ، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي ، لا إِلَهَ إِلا أَنْتَ
என 3 முறை காலையிலும் 3 முறை மாலையிலும் கூறுகிறீர்கள்; என்று நான் கேட்டபோது என் தந்தை கூறினார் “நான் நபி (ஸல்) விடமிருந்து இந்த துஆ வை கேட்டேன் ஆதலால் பின்பற்றுகிறேன்”என்றார்கள்.
《☆》 ஸுனன் அபூதாவூத் இல் குறிப்பிடுகையில்
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، لا إِلَهَ إِلا أَنْتَ
இந்த வார்த்தையும் சேர்ந்து வந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
《☆》 கவலையில் உள்ளவர்கள் கேட்க வேண்டிய துஆ
دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
《☆》 இதில் ஜஹ்ஃபர் இப்னு மைமூன் என்ற அறிவிப்பாளர் இந்த தொடரில் இடம் பெறுகிறார். அவர் பலஹீனமானவர். இமாம் நஸாயீ அவர்கள் இந்த துஆ வை பதிவு செய்துவிட்டு
جعفر بن ميمون: ليس بالقوي في الحديث இவர் பலமானவரல்ல என குறிப்பிட்டிருக்கிறார்கள்.(சுனனுல் குப்ரா)
《☆》 இமாம் பைஹகீ اثبات عذاب القبر (கபர் வேதனை உண்டு) என்ற நூலில் 206 ஆவது செய்தியில் இந்த தொடரின் ஸஹீஹான அறிவிப்பை கொண்டு வந்து இது இன்னொரு வகையிலும் அறிவிக்கப்படுகிறது என்று இந்த அறிவிப்பை குறிப்பிடுகிறார். அது அரபியில் مجهول(Indirect) வகையில் குறிப்பிடுகிறார். பொதுவாக ளயீஃபான செய்திகள் தான் அவ்வாறு (செய்யப்பாட்டுவினையில்) அறிவிப்பார்கள்.
《☆》 ஸுனன் நஸயீ 5465 இல் வரும் அறிவிப்பில்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ يَعْنِي الشَّحَّامَ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ أَبِي بَكْرَةَ، أَنَّهُ كَانَ سَمِعَ وَالِدَهُ، يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَجَعَلْتُ أَدْعُو بِهِنَّ، فَقَالَ: يَا بُنَيَّ، أَنَّى عُلِّمْتَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قُلْتُ: يَا أَبَتِ سَمِعْتُكَ تَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ، فَأَخَذْتُهُنَّ عَنْكَ، قَالَ: فَالْزَمْهُنَّ يَا بُنَيَّ، «فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ
முஸ்லீம் இப்னு அபீ பக்ரா தன் தந்தை அபீ பக்ரா (ரலி) தொழுகைக்கு பின்னால் கூறினார்கள்
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ
என்று தொழுகையில் கூறக்கேட்டேன் ஆகவே நானும் அவ்வாறு செய்ய ஆரம்பித்தேன் அப்போது மகனே உனக்கு இதை யார் கற்றுத்தந்தார் என தந்தை கேட்டபோது நீங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் இதை ஓதுவதை கேட்டேன் ஆகவே நானும் அதை பின்பற்றினேன் என்றபோது; அதை தொடர்ந்து செய்யுங்கள் ஏனெனில் நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கும் பின்னால் இதை சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.
《☆》 இந்த ஹதீஸில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் ஸஹீஹானது, ஆயினும் இந்த செய்தியில் சில பலஹீனங்கள் உள்ளன. இமாம் நஸயீ, பைஹகீ போன்றவர்கள் இதை பலஹீனம் என்று அறிவிக்கிறார்கள்.
கருத்துரைகள் (Comments)