ஹிஸ்னுல் முஸ்லிம் 44

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 44

83 – “حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم “(سبع مرات 

《☆》 அபூதாவூத் 5081

من قال إذا أصبح وإذا أمْسى: حَسْبي الله، لا إله إلا هو، عليه توكلتُ، وهو ربُّ العرش العظيم، سَبْع مرات؛ كفاه الله ما أهمه، صادقًا كان بها أو كاذبًا

அபூ தர்தா (ரலி) – யாரொருவர் காலையிலும் மாலையிலும் 

حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم

என 7 முறை கூறுகிறாரோ அவருடைய தேவைகளையெல்லாம் அல்லாஹ் போக்கி விடுவான் அவர் அதை உண்மையாக சொன்னாலும் பொய்யாக சொன்னாலும் சரியே.

《☆》 இந்த செய்தி அபூதர்தா (ரலி) சொன்னதாகவும்(موقوف) அபூதர்தா (ரலி) நபி (ஸல்) விடமிருந்து கேட்டு அறிவித்ததாகவும்

(مرفوع) வருகிறது. 

《☆》 இப்னு கஸீர் பாகம்- 4 பக்கம் 214 – இப்னு அஸாகீர் அவர்கள் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் தர்ஜமாவில் பதிவு செய்துள்ளார் “صادقًا كان بها أو كاذبًا என்ற வார்த்தையை இமாம் இப்னு கஸீர் பதிவு செய்திருக்கிறார் என  குறிப்பிட்டுவிட்டு (وهذه زيادة غريبة) இந்த மேலதிக தகவல் மிகவும் புதுமையாக இருக்கிறது எனக்கூறிவிட்டு فرفعه فذكر مثله بالزيادة . وهذا منكر அஹ்மத் என்பவர் அதிகப்படுத்தி அறிவித்திருக்கிறார், சில செய்திகளை அதிகப்படுத்தி அறிவித்திருக்கிறார், மேலும் இது நிராகரிக்கத்தக்க செய்தி “என்று இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்.

《☆》 இப்னு அஸாகீர் அவர்களது வேறொரு நூலில் நபி (ஸல்) சொன்னதாக வேறொரு அறிவிப்பாளர் வரிசையாக வருகிறது. அந்த வரிசையில் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஸ்ஸாக் என்பவர் இடம்பெறுகிறார். அவர் அறியப்படாதவராக இருப்பதால் அந்த அறிவிப்பை சரியென ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

《☆》 இமாம் இப்னுஸுன்னி (ரஹ்) அவர்களின் அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் நபி (ஸல்) மூலமாக அறிவிக்கும் அந்த செய்தியை அறிவிக்கிறார் அதில் صادقًا كان بها أو كاذبًا என்ற வார்த்தை இடம்பெறவில்லை. 

《☆》 ஆகவே ஷேய்க் அல்பானி இதை இட்டுக்கட்டப்பட்ட(موضوع) செய்தி என்கிறார்கள்.