حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 56
97- “أعوذ بكلمات الله التامات من شر ما خلق“ ( ثلاث مرات إذا أمسى)
3 முறை மாலை நேரத்தில் ஓத வேண்டும்
⬇️↔ أعوذ بكلمات الله التامات
அல்லாஹ்வுடைய பூரணமான வார்த்தைகளை கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.
⬇️↔ من شر ما خلق
அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து
《☆》 இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) தவ்ஹீத் என்ற புத்தகத்தில் முஹ்தஸிலாக்களுக்கு மறுப்பாக இந்த துஆ வை கொண்டு வந்தார்கள்.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ، قَالَ: ((أَمَا لَوْ قُلْتَ، حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّكَ
அபூஹுரைரா (ரலி) – யா ரசூலுல்லாஹ் நேற்று நான் நட்டுவங்காளியால் கொட்டப்பட்டுவிட்டேன் என்று கூறியபோது. நபி (ஸல்) – நீங்கள் மாலை நேரத்தை அடைந்தபோது
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَஎன்று கூறியிருந்தால் அது உங்களை பாதிக்காது என பதிலளித்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லீம்)
《☆》 இந்த செய்தி ஆதாரபூர்வமானதே ஆயினும் இந்த புத்தகத்தில் இருப்பது போல 3 முறை கூற வேண்டும் என்ற அறிவிப்பும் காலையில் ஓத வேண்டும் என்ற அறிவிப்பும் ஆதாரபூர்வமானதல்ல.
கருத்துரைகள் (Comments)