ஹிஸ்னுல் முஸ்லிம் 58

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 58

16- دعاء الاستفتاح 

(தொழுகையில்)தக்பீர் காட்டியவுடன் ஓதும் துஆக்கள் 

《☆》 ஆரம்ப காலத்திலேயே  இந்த தலைப்பில் அதிகமான கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

《☆》 மாலிகி மத்ஹபில் ஃபர்ளான தொழுகையில்  دعاء الاستفتاح ஓதக்கூடாது. ஆனால் சுன்னத்தான தொழுகைகளில் ஓதலாம் என்றொரு ஃபத்வா இருக்கிறது. அதற்கு அவர்கள் சில ஹதீஸுகளை ஆதாரங்களாக முன்வைத்தார்கள். 

《☆》 இமாம் மாலிக் மதீனாவில் பிறந்து வளர்ந்தவராக இருப்பதால் மதீனாவில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை அவர்களது ஸஹாபாக்கள் மூலமாக கண்முன் கண்டவராக இருந்தார்கள். மக்களுக்கு போதனைகள் செய்யும்போது இமாம் மாலிக் அவர்கள் குர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்ள மதீனா வாசிகளின் அமல்களையும் ஆதாரமாக காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள்.