حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 67
سبحان ربي العظيم மற்றும் سبحان ربي الأعلى துஆக்களை 3 முறை கூறுவது-
《☆》 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்சிய்யா (ரஹ்) தனது zசாதுல் மஆத் என்ற நூலில் தொழுகையின் பாடத்திலும் இமாம் சித்தீக் ஹசன் கான் தனது ரவ்தத்துன்னதிய்யா என்ற நூலிலும் இந்த துஆ வை இத்தனை முறை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்று நிரூபிக்கக்கூடிய ஆதாரபூர்வமான செய்திகள் இடம்பெறவில்லை. ருகூஹிலும் சுஜூதிலும் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்பது போன்ற அறிவிப்புகளே இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டிருந்தார்கள்(அறிஞர்கள் பலரும் இந்த கருத்தையே சரிகாண்கிறார்கள்).
《☆》 இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் ஷேக் அல்பானி (ரஹ்) தனது ஸிfபது ஸலாது நபி என்ற புத்தகத்தில் 7 அறிவிப்புக்களை கொண்டு வருகிறார்கள். மேற்கூறப்பட்ட 6 அறிவிப்புக்கள் அதில் அடங்கும். (இந்த புத்தகம் அவர் ஆரம்ப கால ஆய்வின் அடிப்படையில் தொகுத்ததாகும் அதில் சொல்லப்பட்ட சில துஆக்களை அவரே பிற்காலத்தில் லயீஃப் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே அவரது பிற்கால நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்த ஆதாரங்கள் ஸஹீஹ் என்று கருத முடியாத நிலையில் இருக்கிறது)
《☆》 ஆகவே நபி (ஸல்) அவர்கள் ருகூஹில் سبحان ربي العظيم என்று சொன்னார்கள் அதை எண்ணிக்கையில் கணக்கிட முடியாது.
《☆》 سبحان ربي العظيم ஒரு சிறந்த தஸ்பீஹாக இருக்கிறது.
《☆》ஒற்றைப்படைகளில் கூறுவது சிறந்தது
கருத்துரைகள் (Comments)