ஹிஸ்னுல் முஸ்லிம் 68

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 68

34-سبحانك اللهم ربنا وبحمدك ، اللهم اغفر لي

– البخاري 1/199ومسلم 1/ 350

حديث عائشة في الصحيحين قال: (كان النبي صلى الله عليه وسلم يُكثِر أن يقول في ركوعه وسجوده: “سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفر لي”، يتأول القرآن).

  1. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி’ (இறைவா! உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! என்னை மன்னித்து விடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.

Book : 10 புஹாரி 

 ومعنى: (يتأول القرآن)؛ أي: يفعل ما أمر به فيه، والمراد بالقرآن هنا بعضه، وهو قوله تعالى: ﴿ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴾ [النصر: 3]، وفي هذا الحديث إباحةُ طلبِ المغفرة في الركوع، ولا يعارضه حديثُ ابن عباس المتقدِّمُ عند مسلمٍ: ((فأما الركوع، فعظِّموا فيه الرب))؛ لأن تعظيم الرب في الركوع لا ينافي الدعاء، كما أن الدعاء في السجود لا ينافي التعظيم

تأويل என்ற வார்த்தைக்கு 3 விதமான அர்த்தங்கள் உள்ளன 

  •  மாற்று விளக்கம் கொடுப்பது, பொருத்தமற்ற விளக்கம் கொடுப்பது. )3:7  مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِه(
  • தப்ஸீர் 
  • அந்த விளக்கத்தை கண்ணால் காணும்போது 

7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗ‌ؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ ….

《☆》 நபி (ஸல்) அவர்கள் தங்களது கடைசி காலத்தில் தான் இதை அதிகமாக சொன்னார்கள் என்பதற்கான ஆதாரம் இதாஜாஅ .. சூரா இறங்கியதற்கு பின்னால் தான் இதை ஓத ஆரம்பித்தார்கள் என்பதும். 

《☆》 ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்கள் இந்த துஆ வை  அதிகப்படுத்துவதை கண்டபோது புதிதாக ஏதோ சொல்கிறீர்களே என்று கேட்டபோது நபி (ஸல்) “என்னுடைய உம்மத்தில் நான் ஒரு அத்தாட்சியை காண்பேன் அப்போது நான் இதை சொல்வேன் என்று கூறிய கருத்தும் இடம்பெறுகின்றன. 

《☆》 மக்கா வெற்றியே அந்த அத்தாட்சியாகும். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களது மரணம் நெருங்கியதை நாம் அறிவோம். 

《☆》 இந்த துஆ வை எத்தனை எண்ணிக்கையிலும் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.