தஃப்ஸீர் பாடம் 1
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 1)
ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் தஃப்ஸீர்
திறந்தான் – فتح : சாவி – مفتاح : தோற்றுவாய் – فاتحة
# சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கிறது. ஷேஹ் ஸாலிஹ் பின் அல் உதைமீன் அவர்கள் 2 பெயர்களை மட்டும் இந்த தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார்.
♥️அல் ஃபாத்திஹா ♥️உம்முல் கிதாப்
# இந்த ஸுராவில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள தவ்ஹீது, நேர்வழி, வழிகேடு போன்ற அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருப்பதால் உம்முல் குர்ஆன் என்று அழைக்கப்படுகிறது – ஆசிரியர்.
# சூரத்துல் ஃபாத்திஹா தொழுகையின் ருக்னு (தூண்) – களில் ஒன்று.
# சூரத்துல் ஃபாத்திஹா இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
# நபி (ஸல்) அவர்கள் ஜமாத்திற்கு தொழ வராமல் வீட்டில் இருக்கும் ஆண்களை தீயில் இட்டு எரிக்க விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
# ஜமாத்துடன் தொழும் போது சூரத்துல் ஃபாத்திஹாவை மஃமூம்கள் (இமாமுக்கு பின்னால் இருந்து தொழுபவர்கள்) ஓத வேண்டுமா என்பதில் கருத்து
வேறுபாடு உள்ளது .
# ஓத வேண்டும் என்றும் அல்லது இமாம் ஓதுவதை கவனிக்க வேண்டும் என்றும் கருத்து வேறுபாடு உள்ளது.
கருத்துரைகள் (Comments)