Harani Hani

Author's posts

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6 ❤ வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ நீங்கள் விரையுங்கள்  – وَسَارِعُوْۤا மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ அதன் விசாலம் – عَرْضُهَا வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ இறையச்சமுடையவருக்காக  – لِلْمُتَّقِيْنَۙ‏  

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 5

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5 ✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். காலித் (ரலி) அவர்களது இரத்தத்தை கண்டு அருவெறுப்பு …

Continue reading

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 4 ❖ நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள். ❖ நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் தண்டனை அடைந்து தன்னை இறைவன் முன் தூய்மை படுத்த …

Continue reading

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 3

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 3 ❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.  

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 2

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 2 அல்லாஹ் நம்மைப்பற்றி சொல்லக்கூடிய செய்திகள்: ❤ ஸூரத்துன்னிஸாவு 4:28 பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். ❤  ஸூரத்துல் மஆரிஜ் 70:19 அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். மேலும் தவறுகளுக்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது அவன் அதிகமாக மன்னிக்கக்கூடியவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறான்.  

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 1

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 1 إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه، فأطيلوا الصلاة، واقصروا الخطبة ✴ அம்மார் இப்னு யாசிர் (ரலி) – நபி(ஸல்) – மனிதன் விபரமானவன் என்பதற்குரிய அடையாளம் அவன் தொழுகையை நீளமாக தொழுவான் உரையை சுருக்கமாக்கிக்கொள்வான்.(அஹ்மத், முஸ்லீம்). ❤ வசனம் 3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ ➥ இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 11

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 11 ❤ வசனம் 74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ ➥   மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். ❤ ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக இருந்தால் போதாது; தன் குடும்பத்தையும் அதற்காக வேண்டி …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10 ❤ வசனம் 72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ ➥   அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். ❤ நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு செல்லாமல் நட்டுவிட்டு செல். ❤ வசனம் 73 وَالَّذِيْنَ اِذَا …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9 ❤ வசனம் 69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا   ➥   கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். ❤ வசனம் 70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ ➥   ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8 لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல் கொலைக்கு கொலை பரிகாரம் மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர் இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் செய்யக்கூடாது. விபச்சாரத்தை வேரோடு களையும் இஸ்லாம் …

Continue reading