ஹதீஸ் 1
யார் அல்லாஹ்வின் முகத்தை நாடியவராக ஒரு நாள் நோன்பு நோற்று, அதுவே அவருடைய கடைசி நாளாகவும் ஆகிவிட்டால் அவர் சொர்க்கம் நுழைவார்
(ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் 985)
ஆதாரபூர்வமானது
_________________________________________________________________
ஹதீஸ் 2
இல்மு திக்ரு – அல்லாஹ்வை திக்ரு செய்வதன் சிறப்புகள்
122.ஒருநாள், சுப்ஹுத் தொழுகும் நேரம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து சென்ற சமயம், அவர்கள் தம் தொழுமிடத்தில் அமர்ந்து (திக்ரு செய்துகொண்டு) இருந்தார்கள். நபி (ஸல்) ளுஹாத் தொழுதுவிட்டு திரும்பி வந்தபோதும் அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். நான் எந்நிலையில் உம்மை விட்டுச் சென்றேனோ அதே நிலையில் அமர்ந்துள்ளீரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ஆம்” என்று சொன்னார்கள். உம்மை விட்டுச்சென்ற பிறகு நான்கு கலிமாக்களை மூன்று முறை கூறினேன். அக்கலிமாக்களையும், நீர் காலையிலிருந்து இதுவரை ஓதியவற்றையும் எடை போட்டுப் பார்த்தால், அக்கலிமாக்களின் எடை கனமுள்ளதாக ஆகிவிடும். ( سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ ) அல்லாஹ்வின் படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவனது பொருத்தத்தின் அளவு அவனது அர்ஷின் எடையளவு, அவனது கலிமாக்களை எழுதும் மையளவு அல்லாஹ்வைத் துதிக்கிறேன்” என்பதாகும்.
(முஸ்லிம்)
ஆதாரபூர்வமானது
______________________________________________________________
ஹதீஸ் 3
உழைப்பாளியின் கூலியை அவன் வியர்வை உலர்வதற்கு முன் கொடுத்துவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
விளக்கம்:
இந்த ஹதீஸ் ஆதாரபூர்மானதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. சிலர் ஆதாரபூர்மானது எனவும் மற்றும் சிலர் ஆதாரபூர்மானதல்ல எனவும் கூறியுள்ளனர். ஆனாலும் வேறு ஹதீஸ்களை வைத்தும் இஸ்லாத்தின் நீதி வலுவாத் தனமையின் அடிப்படையிலும் இதில் கூறப்பட்டுள்ள தகவல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.
_________________________________________________________________
ஹதீஸ் 4
ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக,சிலர் குழியில் இறங்குவார்கள்.
அப்படி இறங்குபவர்கள் அன்றைய தினம் மனைவியோடு உடல் உறவு வைத்திருந்தால் அவர்கள் குழியில் இறங்க அனுமதி இல்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) உத்தரவுவிட்டுள்ளதாக ஹதீஸ் உள்ளது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்‘ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் இறங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) கப்ரில் இறங்கினார்.
நூல்:-புஹாரி(1285)
EXPLANATION:
ஸஹீஹ் ஆனால் அனுமதியில்லை என்ற கருத்து ஹதீஸில் இல்லை. அவ்வாறு ஒருவர் கிடைத்தால் சிறந்தது என்று மாத்திரமே பொருள் கொள்ளலாம்.
__________________________________________________
ஹதீஸ் 5
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
ஆதாரபூர்வமானது
_______________________________
ஹதீஸ் 6
எனக்கு பிறகு கொடுங்கோளான ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள்.யார் அவர்களின் பொய்களையும் அடக்குமுறைகளுக்கும் வலியுறுத்தவும் ஆதரவும் தருவார்களோ அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
நபிமொழி
சுனன் அன்நஸாயி 4207
ஸஹீஹ்
___________________________________________
ஹதீஸ் 7
உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித்தோழர்கள் “நீங்கள் மக்கிவிடும்போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக்காட்டப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான் (மக்கிவிடாது) என்றனர்.
அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(ரழி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.
ஆதாரபூர்வமானது
___________________________________________________
ஹதீஸ் 8
மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ–அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:
யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்
اللهم اني اسالك العافية
“அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா
(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)
ஆகவே இப்பொழுது ஆஃபியா என்றால் என்ன?
ஆஃபியாவின் பொருளானது எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று“
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும்.
வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்” இருக்கிறீர்கள்
உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்
ஆஃபியாவின் பொருள்
யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆகிராவையும் சேர்த்தே குறிக்கும்.
அல் – அப்பாஸ் அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:
“யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.
இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது
யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!
இதெல்லாம் “அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் – ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். ஸுனன் திர்மிதி
ஆதாரபூர்வமானது
_____________________________________________
ஹதீஸ் 9
நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதனுநக்லா என்ற இடத்தில் இறங்கினோம். அப்போது பிறையைக் கவனித்தோம்;. அக்கூட்டத்தில் சிலர் இது மூன்றாவது நாளுக்குரியது (இப்னு ஃதலாஃத்) என்றனர். மற்றும் அக்கூட்டத்தில் சிலர் இரண்டாவது நாளுக்குரியது (இப்னு லைலத்தைன்) என்றனர். அப்பொழுது நாங்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் நிச்சயமாக பிறையை கவனித்தோம் சில நபர்கள் அது மூன்றாம் நாளுக்குரியது என்றும் மேலும் சில நபர்கள் அது இரண்டாம் நாளுக்குரியது என்றும் கூறினோம். அதற்கவர்(இப்னு அப்பாஸ் ரழி) நீங்கள் எந்தக் கிழமையில் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இன்ன இன்ன கிழமைகளில் கவனித்தோம் என்று விடையளித்தோம். அதற்கவர்கள்(இப்னு அப்பாஸ் ரழி), நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை வழங்கி உள்ளான். எனவே அதை எந்தக் கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்தக் கிழமைக்குரியது என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள். அறிவித்தவர் : அபுல்பக்தரீ, (நூல்: முஸ்லிம் 1885)
ஆதாரபூர்வமானது
__________________________________________
ஹதீஸ் 10
நபியவர்கள் ஒரு மரத்தடியில் தூங்கிக்கொண்டிருக்கும் சமயம் ஒரு காபிர் நபியவர்களை கொலை செய்ய முயன்றதாக வரும் ஹதீஸ் ஸஹீஹானதா???
ஸஹீஹ்
____________________________________________
ஹதீஸ் 11
புனித அல்குர்ஆனில் ஓர் அத்தியாயம் இருக்கிறது. அது முப்பது வசனங்களைக் கொண்டதாகும். அதை ஓதுபவருக்கு அவரது பாவம் மன்னிக்கப்படும் வரை அது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும். அது தான் ‘தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” என்று ஆரம்பமாகும் அத்தியாயமாகும் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).
நூல்: அபூதாவூத்,திர்மிதி,நஸாஈ
குறிப்பு: சேக் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதாரபூர்வமானது
___________________________________________
ஹதீஸ் 12
‘உக்ல்‘ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். .(ஆதாரம் புகாரி )மேலும் இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹமத், பய்ஹகீ இன்னும் பல கிரந்தங்களிலும் கானக்கூடியதாக உள்ளது.
ஸஹீஹ்
_________________________________
ஹதீஸ் 13
பாவமன்னிப்புக் கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை *ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.*
(பொருள் அறியவும் மனனமிடவம் இலக்கமிடப்பட்டுள்ளது.)
அள்ளாஹும்ம அன்(த்)த ரப்பீ.
- லா இலாஹ இல்லா அன்(த்)த
- khகலக்(த்)தனீ
- வஅன அப்து(க்)க
- வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து 6. அவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஸனஃ(த்)து
- அபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய
- வஅபூவு ல(க்)க பிதன்பீ
9.fபgக்fபிர் லீ
10.fப இன்னஹு லா யgக்பிருத் துனூப இல்லா அன்(த்)த.
*இதன் பொருள்:*
1.இறைவா! நீயே என் எஜமான்.
2.உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
3.என்னை நீயே படைத்தாய்.
4.நான் உனது அடிமை. 5.உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன்.
6.நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். 7.நீ எனக்குச் செய்த அருளோடு உன்னிடம் மீள்கிறேன்.
8நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.
9.எனவே, என்னை மன்னிப்பாயாக! 10.உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: *புகாரி 6309*
ஸஹீஹ்
______________________________________________
ஹதீஸ் 14
குர்ஆனை ஓதுவது என்றால் உஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மிகவும் ஆசை!
தனியாக உட்கார்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.
அதுவும் இரவு நேரத்தில், மக்கள் எல்லாம் தூங்கிய பிறகு, நட்சத்திரங்கள் மட்டும் விழித்திருக்கும் நேரத்தில் தனியாக உட்கார்ந்து ஓதுவார்.
ஒருநாள் அதேபோல இரவுநேரம் ஊரெல்லாம் இருட்டு கவிந்திருந்தது. தூங்க மனம் வரவில்லை உஸைதுக்கு! இரவு நேரத்தில் இறை அடியார்கள் தூங்க நினைக்க மாட்டார்கள். இறைவனை வணங்க வேண்டும்: குர்ஆனை ஓதவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வீட்டின் கொல்லைப் புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் தன்னுடைய மகனையும் படுக்கவைத்துக் கொண்டார்.
கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய குதிரை கட்டிப் போடப்பட்டிருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆசையோடு வாங்கிய குதிரை அது!!
நிலவில்லாத வானம் அமைதியாக காணப்பட்டது.
விண்மீன்களும் மௌனமாக உட்கார்ந்தன.
முதல் அத்தியாயம் அல்பகராவை ஓதத் தொடங்கினார்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இனிமையாக ஓதவேண்டும். என்று அல்லாஹவின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் சொல்லி உள்ளார்கள் அல்லவா?
அலிஃப், லாம், மீம்—– என்று ஓதிக் கொண்டே போனார்.
திடீரென்று அவருடைய குதிரை கனைத்தது..
துள்ளிக் குதித்தது!
கட்டியுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும் போலத் தோன்றியது.
உஸைத் அதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஓதுவதை நிறுத்திவிட்டார்.குதிரையும் அமைதியாகிவிட்டது.
சத்தம் போடாமல் நின்று கொண்டது.
மீண்டும் உஸைத் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.
உலாயிக்க அலா ஹூதம் மிர்ரப்பிஹிம் வ உலாயிக்க ஹுமுல் முஃப்லிஹூன்….
குதிரை மீண்டும் கனைத்தது..
திமிறியது:
கால்களை உதைத்துக் கொண்டது.
உஸைத் பயந்து போனார்.
குதிரை பிய்த்துக் கொண்டுவந்து பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டுள்ள குழந்தையை உதைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார்.
குர்ஆன் ஓதுவதை நிறுத்திவிட்டார்.
குதிரையும் அமைதியாகிவிட்டது.
குழந்தையை எடுப்பதற்காக குழந்தையின் பக்கத்தில் சென்றார்.
எழுந்துநின்று வானத்தைப் பார்த்தவர் திகைப்படைந்து நின்றுவிட்டார். வானத்தில் எங்கும் மேகங்கள் நிறைந்து இருந்தன.
ஏதோ! ஒளியால் நிரம்பிய தொட்டியில் முக்கி எடுத்தவை போல அவை காணப்பட்டன.
என்னவென்று உற்றுப்பார்ப்பதற்குள் அவை மறைந்துவிட்டன.
காலையில் நடந்த விஷயங்களை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கூறினார்.
எல்லாவற்றையும் கேட்டபிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
நீங்கள் ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?
நீங்கள் ஓதுவதைக் கேட்க மலக்குகள் வந்து இருந்தார்கள்.
காலைவரை நீங்கள் ஓதி இருந்தால் மக்களும் அவர்களைப் பார்த்திருப்பார்கள்!!
ஆதாரபூர்வமானது
___________________________________
ஹதீஸ் 15
(இதய பலவீனத்திற்கு சிகிச்சை)
நபி ஸல்லல்லாஹு அலய்ஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் ஹரீரா கொடுக்குமாறு நபியவர்கள் கூறுவார்கள் மேலும் ஹரீரா கவலையடைந்தவரின் மனதிற்கு தெம்பை ஏற்படுத்துகிறது நீங்கள் தண்ணீரால் முகத்தின் அழுக்கை கழுவி நீக்குவது போல நோயாளியின் மனக் கவலையை இது நீக்குகிறது என நபி ஸல் கூறினார்கள்
– இப்னு மாஜா 3445
குறிப்பு : பார்லி (வாற்கோதுமை) யின் மாவை வறுத்து அதில் நெய் சர்க்கரை பழங்கள் சேர்த்து நன்றாக காய்ச்சி தயாரிக்கப்படுவதே ஹரீரா எனப்படும்
ஆதாரபூர்வமானது
______________________________________________
ஹதீஸ் 16
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி 2710
ஆதாரபூர்வமானது
___________________________________________
ஹதீஸ் 17
நபிகள்(ஸல்) கூறினார்கள் ;
👇👇👇👇👇👇👇👇👇
மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள்.
அவர்கள் மீண்டும் குடித்தால்
அப்போதும் சாட்டையால் அடியுங்கள்.
அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும்
சாட்டையால் அடியுங்கள்.
இதன் பிறகும் குடித்தால் அவர்களை
கொன்று விடுங்கள்.
👇👆👇👇👆👇👆👇
அறிவிப்பவர்: முஆவியா(ரலி)
நூல்:அபுதாவூத்-3886.
ஆதாரபூர்வமானது
________________________________________
ஹதீஸ் 18
அழகிய மார்க்கம் இஸ்லாம் படித்தால் கண் கலங்கி போவீர்கள்
மெய் சிலிர்த்து போவீர்கள் அவசியம் படியுங்கள் இப்படி ஒரு
ஆட்ச்சியா ???
மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
*நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
*அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா….? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே…? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது…?’ எனக் கத்தினார்.
*உமரோ அமைதியாக, “நண்பரே..! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர் போல் தோன்றுகிறது. அதனால் தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்..?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்..?” என்று உமர் கேட்டார்.
*“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கி விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.
*“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்..?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன்.
*“நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள். கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.
*வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா..?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.
*சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பி விட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
*“இந்நாட்டிற்கு உமர் தானே இப்போது தலைவர்…?’
**“ஆமாம்.’
*“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே..!’
*“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’
*“நீர் உமரை பார்த்திருக்கிறீரா….?’
*“பார்த்திருக்கிறேன்.’
*“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’
“அவரிடம் ஏது பணம்…?’
*“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்…?’
*“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’
*இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே…! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’
*“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே…! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்…? என்ன நடந்துவிட்டது..?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.
*“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்..?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப் போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்…?’
*“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே…? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே…! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.
*இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.
சுபஹானல்லாஹ் இந்த நிகழ்வை எத்தனை முறை படித்தாலும் என் கண்கள் கலங்குகின்றன
Explanation:
இது ஹதீஸ் இல்லை ஆனால் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தது உண்மை
__________________________________________
ஹதீஸ் 19
- ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) “கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது“ என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்🙂
நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள். என்று கூறினார்கள்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?“ என்று கேட்டேன். அப்போது, “அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்“ என்று எனக்குச் சொல்லப்பட்டது. 28 அப்போது “அடிவானத்தைப் பாருங்கள்“ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், “அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்“ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். “இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்“ என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். “நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்“ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, “(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்“ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, “அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!“ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “ஆம்“ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்களில் நானும் ஒருவனா?“ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்“ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
ஸஹீஹ்
________________________________________
ஹதீஸ் 20
உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். அறிவிப்பாளர் இஸ்ராயீல் இப்னு யூனுஸ்(ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக் காட்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 5896. , அத்தியாயம்: 77. ஆடை அணிகலன்கள்)
ஸஹீஹ்
_____________________________________
ஹதீஸ் 21
பனிரெண்டு வானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு எடுத்து செல்லும் இலகுவான திக்ர்“ரை,அறிந்து கொள்வோம் !!!!!!
”அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி”
(தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது ]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
”பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே ”இதை எடுத்துச் செல்பவர் யார்” எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்”
என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 1051
ஸஹீஹ்
___________________________________
ஹதீஸ் 22
கேள்வி:
பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப்படும் என்று வரும் செய்தி ஆதாரமூர்வமானதா?
ஆதாரபூர்வமானது
________________________________________
ஹதீஸ் 23
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 1144
ஸஹீஹ்
______________________________________
ஹதீஸ் 24
(ஒரு மனிதன் தான் செவியுறும் ஒவ்வொரு விடயத்தையும் பேசுவதே அவன் பொய்யனாக இருப்பதற்கு போதுமானதாகும். –முஸ்லிம்–
ஸஹீஹ்
______________________________________
ஹதீஸ் 25
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துன்பத்தின் போது) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்.“
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் :
ஸஹீஹ்
_________________________________
ஹதீஸ் 26
🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭🔥🎭
*🎲🎲ஹதீஸில் துஆக்கள்:77-02🎲🎲*
*🎲🎲தொழுகையைத் துவக்கிய உடன்🎲🎲*
🎱👇🎱👇🏿🎱👇🎱👇🏿🎱👇🎱👇🏿🎱👇🎱👇🏿🎱👇🎱
*🌳🌳وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِيْ يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ🌳🌳*
🏵👇🏵👇🏵👇🏵👇🏵👇🏵👇🏵👇🏵👇🏵👇🏵
*🎪🎪வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ஃப(த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷ்ரீ(க்)க லஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ வஅன அப்து(க்)க ளலம்து நஃப்ஸீ வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபக்ஃபிர்லீ துனூபீ ஜமீஅன், இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா லா யஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை(க்)க வஸஃதை(க்)க வல் கைரு குல்லுஹு ஃபீ யதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்த வதஆலை(த்)த அஸ்தஃக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.🎪🎪*
*🎨ஆதாரம்: முஸ்லிம்🎨*
ஸஹீஹ்
_________________________________
ஹதீஸ் 27
பிறக்கும் எல்லா குழந்தைகளும் இயற்கையிலேயே பிறக்கின்றன.. பெற்றோர்களின் வளர்ப்பினாலேயே அவர்கள் காபிர்களாக மாறுகிறார்கள்.
ஸஹீஹ்
_____________________________________
ஹதீஸ் 28
யார் அல்லாஹ்வுடைய பாதையில் மரணிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் நயவஞ்சகத்திலேதான் மரணிக்கிறார்..
ஸஹீஹ்
_______________________________________
ஹதீஸ் 29
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்).
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ்
____________________________________
ஹதீஸ் 30
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் “ளுஹா” தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கண்டார்கள். அப்போது “இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என இவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்” எனக் கூறினார்கள்” என்றார்கள்.
ஸஹீஹ்
_______________________________
ஹதீஸ் 31
உங்களிடம் இரண்டை விட்டு செல்கிறேன் ஒன்று கிதாபல்லாஹ் மற்றொருண்டு என் வழிமுறை இந்த இரண்டையும் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவர மாட்டீர்கள்
ஆதாரபூர்வமானது
__________________________________________
ஹதீஸ் 32
அதிகாலை தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாரு விவரிக்கிண்ட்றார்கள் *”படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனை பார்த்து இறைவன் வியப்படைகிரான்* _வானவர்களிடம் கேட்கிரான்_
வானவர்களே எனது இந்த அடியானை பாருங்கள் !!
படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில் அதிகாலையில் எழுந்து விட்டான் எதற்காக ?? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு ?? எனது அருள் மீது ஆசை வைத்தா?? எனது தண்டனையை பயந்தா?? _பின்னர் வானவர்களிடம் அல்லாஹ் வே கூருகிரான்_
*உங்களை சாட்சி வைத்து கூறுகிறேன் : அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சியம் கொடுப்பேன், அவன் எதை பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சியம் அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்* (ஆதாரம்: அஹ்மத்)
ஆதாரபூர்வமானது
___________________________________
ஹதீஸ் 33
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) “ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
*நூல்:அஹ்மத் 20349*
ஸஹீஹ்
________________________________
கருத்துரைகள் (Comments)